chrome
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முதன்முதலாக யாழில் சர்வதேச திரைப்பட விழா: நாளை ஆரம்பம்

In இலங்கை
Updated: 11:49 GMT, Sep 14, 2015 | Published: 11:49 GMT, Sep 14, 2015 |
0 Comments
1616

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக நடத்தப்படவுள்ள சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை ஆரம்பமாகவுள்ள இத்திரைப்பட விழா எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்போது இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்தும் சுமார் 50 வரையிலான திரைப்படங்கள், ஆவண படங்கள், குறுந்திரைப்படங்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச நாடுகளின் திரைப்பட துறையைச் சார்ந்த ஏழு கலை ஆளுமைகளும் தொடக்கி வைக்கப்படவுள்ளன. இந்த சர்வதேச திரைப்படவிழா ஆரம்ப நிகழ்வினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், ஆரம்ப உரையாற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இசைஞர் காயத்ரீ ஹேமதாஸ ‘இசை சமர்ப்பணம்’ என்ற இசை நிகழ்ச்சியை அவரது தந்தையான இசைச்சக்கரவர்த்தி பிரேமசிறி ஹேமதாஸவை நினைவு கூறும் நிகழ்வாக நடாத்தவிருக்கின்றார். அன்றைய தினம் ‘யூரோப்பியன் பனோரமாவின்’ ஆரம்ப திரைப்படமான பியோனெக்ஸ் 98 (2014) என்ற ஜேர்மனிய திரைப்படம் திரையிடப்படவிருக்கின்றது.

இந்த ஆரம்ப நிகழ்வில், அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு சர்வதேச திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related Post

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*