chrome
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘முக்கோண தென்னை பயிர்ச்செய்கை வலயம்’ யாழில் அங்குரார்ப்பணம்

In இலங்கை
Updated: 13:53 GMT, Jul 9, 2016 | Published: 12:17 GMT, Jul 9, 2016 |
0 Comments
1585

வடமாகாணத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது முக்கோண தென்னை பயிர்ச்செய்கை வலயம், இன்று (சனிக்கிழமை)  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால், யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்து வைக்கப்பட்டது.

தென்னை அபிவிருத்தி விரிவாக்கல் செயற்திட்டத்தின்கீழ், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இருநூறு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி இந்த முக்கோண தென்னை பயிர்ச்செய்கை வலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

யாழ் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி அமரசிங்க தலைமையில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதுடன், தெங்கு அதிகார சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விஷேட கண்காட்சி ஒன்றையும், அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

மேலும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கைத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக, கைத்தொழில் உபகரணங்கள் மற்றும் ஊக்கிவிப்பு கொடுப்பனவுகளும், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்தபெரேரா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ், முல்லைதீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரச அதிபர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

g  06 g 03 g 04 g 05 g 07

Related Post

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*